Categories
உலக செய்திகள்

6 கால்களுடன் பிறந்த கன்று… இணையத்தில் குவிந்த ஆதரவு… நெகிழ வைத்த சம்பவம்…!!!

வடக்கு அயர்லாந்தில் ஆறு கால்களுடன் பிறந்து புறக்கணிக்கப்பட்ட கன்றுக்கு மறுவாழ்வு கிடைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வடக்கு அயர்லாந்தில் ஒரு அதிசயம் நிகழ்ந்துள்ளது.அங்குள்ள  ஒரு மாட்டுப் பண்ணையில் பசு ஒன்று காளை கன்றை ஈன்றது. அந்தக் கன்று 6 கால்களுடன் இருப்பதை பார்த்த அனைவரும் மிகுந்த ஆச்சரியத்திற்கு தள்ளப்பட்டனர். கன்றை பார்த்த உரிமையாளர் அதை ஒரு குறைபாடாகவே எண்ணினார். மேலும மற்ற உயிரினங்களால் இந்த கன்று பண்ணையிருந்து புறக்கணிக்கப்படும் என்று கவலைப்பட்டார். இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்தது முற்றிலும் இயற்கைக்கு முரணானது என்று நினைத்தார் . இந்த அதிசயம் மிகப்பெரிய அளவில் அந்நாட்டில் சமூக ஊடகங்களில் வைரலானது.

இந்நிலையில் நண்பர்கள் கன்றின் குறைபாட்டை “ஏஞ்சல் சிறகுகள்” என்று அழைத்தனர்.6  கால்களுடன் கூடிய கன்று குட்டிக்கான புதிய வீட்டை கண்டுபிடிப்பதற்காக பிரச்சாரத்தை சமூகவலைதளத்தில் நடத்தினர். பண்ணையின் உரிமையாளர் விவசாயி என்பதால் ஏஞ்சல் சிறகுகளை அதனிடம் இருந்து பிரித்து எடுக்க கால்நடை மருத்துவரின் உதவியை நாடினார். ஆனால் கால்நடை மருத்துவர் கன்றுக்குட்டியின் கூடுதல் கால்களில் ஒன்று அதன்  முதுகெலும்புடன் இணைக்கபட்டுள்ளதாக கூறினார். ஆனால் அதைத் பிரித்தெடுப்பது சற்று கடினம் என்று தெரிவித்தார்.

விவசாயி தொண்டு நிறுவனங்களான நெட் ஹவுஸ் ஹென் ரெஸ்கியூ & ரீ ஹோமிங் யை  தொடர்பு கொண்டனர். கன்று  நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ ஒரு புதிய வீட்டை கண்டுபிடிக்க உதவி செய்தார்கள். வளர்ப்பு பெற்றோரை தேர்ந்தெடுப்பதற்காக கன்றை பற்றிய விவரங்களை பேஸ்புக்கில் மூலம் பதிவு செய்து பிரச்சாரம் செய்தனர். இந்த கன்றை தத்தெடுக்க ஆர்வமுள்ளவர்கள் நிறுவனத்தை அணுகலாம் என்று விவசாயி பதிவிட்டுள்ளார்.

இந்த ஆறு கால்களை கொண்ட கன்றை பற்றிய பதிவு பகிரப்பட்ட 24 மணி நேரத்திற்குள் சுமார் 49 000 பேரை கவர்ந்தது 300க்கும் மேற்பட்ட கருத்துக்களும் 100க்கும் மேற்பட்ட செய்திகளும் கிடைத்ததை நினைத்து நாங்கள் மகிழ்ச்சி அடைந்தோம் என்று தொண்டு நிறுவனம் கூறியுள்ளது. சமீபத்தில் தொண்டு நிறுவனம் அன்று வாழ்நாள் முழுவதும் தங்க ஒரு புதிய பண்ணைவீடு கண்டுபிடிக்கப்பட்டதாக பதிவினை வெளியிட்டது.

மேலும் கன்று தஞ்சமடைந்த வீடு வடக்கு அயர்லாந்தில் இருக்கக்கூடும் என்றும்  இந்த குட்டிக்கு தோர் என்று பெயரிடலாம் எனவும் தொண்டு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது. கன்றை பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை தத்தெடுத்தவர்  பற்றியும்  எந்த விவரமும் தெரியவில்லை. இதனிடையில் கன்றை தத்தெடுத்த அந்த நபருக்கு பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டுக்கள் குவிந்து கொண்டே வருகிறது.

Categories

Tech |