Categories
தேசிய செய்திகள்

6 கிமீ….. நடுகாட்டில் கட்டில் பயணம்….. தாய்..சேய்… உயிர்களை காப்பாற்றிய CRPF வீரர்கள்…!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் பிரசவ வலியால் துடித்த பெண்ணை மத்திய அரசு பாதுகாப்பு படை வீரர்கள் கட்டிலில் வைத்து 6 கிலோமீட்டர் தூரம் தூக்கிச் சென்று மருத்துவமனையில் அனுமதித்தனர். 

சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள குக்கிராமம் ஒன்றில் மத்திய அரசு பாதுகாப்பு படையின் 85 ஆவது பிரிவைச் சேர்ந்த வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது குறிப்பிட்ட கிராமத்தில் கர்ப்பிணி பெண் ஒருவர் பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருப்பதை கண்டனர்.

அப்போது கிராமத்தின் அருகே மருத்துவமனையோ வாகனங்கள் செல்வதற்கு உரிய சாலை வசதிகளும் இல்லாததை அறிந்த பாதுகாப்பு படை வீரர்கள் கர்ப்பிணியை கட்டிலில் அமரவைத்து சுமார் ஆறு கிலோமீட்டர் தூரம் வரை தூக்கிச் சென்று அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மனித நேயத்துடன் செயல்பட்டு தாய் சேய் உயிர்களை காப்பாற்றிய  சிஆர்பிஎஃப் மாவீரர்களுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளனர்

Categories

Tech |