யூரோ கால்பந்து இறுதிப் போட்டியில் இங்கிலாந்து கோப்பையைத் தவற விட்டதால் அணியில் இருக்கும் கருப்பின வீரர்கள் கடுமையாக விமர்சிக்கப்பட்டனர்.
இங்கிலாந்து வீரர்கள், Bukayo Sako, Marcus Rashford மற்றும் Jadon Sancho போன்றோர் பெனால்டி வாய்ப்பை உபயோகிக்க தவறியதால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்கள். எனவே அவர்கள் கண் கலங்கி அழுத புகைப்படங்கள் வெளியாகின. மேலும் அமெரிக்காவின் தடகள வீராங்கனையான Gwen Berry என்ற கருப்பினத்தவர், “அவர்களுக்கு ஏதேனும் நன்மை நம்மால் உண்டானால் மட்டும் தான் கருப்பினத்தவர்களை பிடிக்கும்” என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் வீரர்களுக்கு ஆதரவாக மக்கள் களமிறங்கியுள்ளனர். அந்த வகையில் இணையதள கணக்குகளை உபயோகிக்க அடையாள அட்டை அவசியம் என்ற புகார் மனுவில் தற்போது வரை 6,50,000 நபர்கள் கையெழுத்திட்டுள்ளனர். சில பிரபலங்கள் இணைந்து இந்த புகார் மனுவை உருவாக்கியுள்ளார்கள்.
இந்த மனுவில் ட்விட்டர், முகநூல் போன்றவற்றை பயன்படுத்துபவர்களை கண்டுபிடிக்கும் விதமாக அவர்களின் அடையாள அட்டை அல்லது ஏதேனும் ஒரு ஆவணத்தை பயன்படுத்தினால் தான் இணையதளங்களை உபயோகிக்க அனுமதி வழங்கவேண்டும் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்த கோரப்பட்டுள்ளது.
மேலும் 3 பெண்கள் இணைந்து “இன அடிப்படையில் விமர்சனம் செய்பவர்கள், தங்களின் வாழ்நாள் முழுக்க இங்கிலாந்தில் நடக்கும் எந்த ஒரு கால்பந்து போட்டியிலும் கலந்து கொள்ள தடை விதிக்க வேண்டும் என்ற பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார்கள்.
இதனை ஆதரித்து ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் கையெழுத்திட்டுள்ளனர். இதனிடையே இந்த வீரர்களை விமர்சித்த நபர்களை கண்டுபிடிக்க உதவுங்கள் என்று முகநூல், ட்விட்டர் போன்ற இணைய தளங்களில் அமைச்சர்கள் அழுத்தம் கொடுத்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.