Categories
உலக செய்திகள்

6 லட்சத்தை எட்டிய கொரோனா பாதிப்பு… அமெரிக்க கலிபோர்னியா மக்கள் அச்சம்…!!!

அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் கொரோனா பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை ஆறு லட்சத்தை எட்டியுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள உலக நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்தும் முதலிடத்தில் இருக்கின்றது. அந்நாட்டில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை 55 லட்சத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அதனைப் போலவே கொரோனாவிற்கு பலியானவர்களின் எண்ணிக்கையும் இன்னும் சில நாட்களில் இரண்டு லட்சத்தை எட்டும் நிலையில் இருக்கின்றது. இந்நிலையில் அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு அதிகம் கொண்ட முதல் மாகாணமான கலிபோர்னியாவில் பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை ஆறு லட்சத்தை எட்டியுள்ளது.

அம்மாகாணத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 7,934 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6,01,075 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,996 ஆக இருக்கின்றது. கலிபோர்னியா மாகாணத்தில் ஒரு கோடி மக்கள் தொகையைக் கொண்டுள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம் கொரோனாவால் அதிகம் பாதிப்படைந்துள்ளது. அந்நகரத்தில் மட்டும் தற்போது வரை 2,18,693 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். அது மட்டுமன்றி 5,214 பேர் உயிரிழந்துள்ளனர்.

Categories

Tech |