Categories
தேசிய செய்திகள்

6 மாநிலங்களில் இடைத்தேர்தல்…. பலத்த பாதுகாப்புடன் தொடங்கிய வாக்குப்பதிவு….!!!

இந்தியாவில் மகாராஷ்டிரம், பீகார், ஹரியானா, தெலுங்கானா, உத்தரப்பிரதேசம் ஒடிசா ஆகிய 6 மாநிலங்களில் 7 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இந்த தொகுதிகளில் பலத்த பாதுகாப்புடன் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து இடைத்தேர்தல் நடைபெறும் ஏழு தொகுதிகளும் நவம்பர் 6ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இதில் தெலுங்கானாவில் முனுகோர்ட் மற்றும் மகாராஷ்டிராவில் அந்தேரி கிழக்கு தொகுதிகளை கைப்பற்றி தங்களது பலத்தை நிரூபிக்க அரசியல் கட்சிகள் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது‌.

Categories

Tech |