சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தையை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சோளிங்கநல்லூர் கிராம நெடுஞ்சாலை பகுதியில் 54 வயதுடையவர் வசித்து வருகின்றார். இவருக்கு 14 வயது உடைய மகள் இருக்கின்றார். இவர் 10-ம் வகுப்பு படித்து வருகின்றார். இந்நிலையில் திடீரென சிறுமிக்கு வலிப்பு நோய் ஏற்பட்டு கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் 6 மாதம் கர்ப்பமாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து மருத்துவர்கள் செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். அவர்கள் கிண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சிறுமியின் கர்ப்பத்திற்கு காரணம் அவரது தந்தை என்பதும் கடந்த 2 ஆண்டுகளாக மகளை மிரட்டி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது. அதன்பின் காவல்துறையினர் தந்தை மீது வழக்குபதிவு செய்து அவரை கைது செய்தனர்.