ஆறு மாத கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மெட்ராத்தி பகுதியில் சதீஷ் குமார் என்ற டிரைவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் வசிக்கும் கிருஷ்ணவேணி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது கிருஷ்ணவேணி 6 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் சதீஷ்குமார் தூங்கிக் கொண்டிருந்தபோது, கிருஷ்ணவேணி அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதனையடுத்து கண்விழித்து பார்த்த சதீஷ் குமார் தனது மனைவி தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து குடிமங்கலம் காவல் நிலையத்தில் கிருஷ்ணவேணியின் தந்தை செல்வராஜ் என்பவர் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த கொடிமங்கலம் காவல்துறையினர் சதீஷ்குமாரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.