மாணவர்களின் நலன் கருதி இலவசமாக ரேஷன் பொருட்கள் வழங்க முடிவு செய்ததாக மாநில அரசு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளி கல்லூரிகள் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டுள்ளது. மாணவர்கள் அனைவரும் ஆன்லைன் மூலம் பாடம் பயின்று வருகின்றனர். பள்ளி திறப்பது குறித்து பல்வேறு ஆலோசனைகள் நடந்துவந்தது. இருப்பினும் மாணவர்களின் நலன் கருதி முடிவுகளை எடுக்காமல் உள்ளது. டெல்லியை பொறுத்தவரை தடுப்பூசி கிடைத்த பிறகே பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. மதிய உணவு திட்டத்தின் கீழ் பயன் பெற்ற மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
இதனை கருத்தில் கொண்டு மாணவர்கள் பெற்றோர்களின் வங்கி கணக்கில் பணமாக மாநில அரசு செலுத்தி வந்த சூழலில், அடுத்த ஆறு மாதங்களுக்கு மதிய உணவு திட்டத்தின் கீழ் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். அதன்படி இனி ஒன்று முதல் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு அரிசி. கோதுமை, தானியங்கள், சமையல் எண்ணெய் உள்ளிட்டவை வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.
ஊரடங்கு நாட்களில் அனைத்து மக்களுக்கும் போதிய உணவு வழங்கும் முயற்சி எடுத்துள்ளோம். 10 லட்சம் மக்களுக்கு டெல்லி அரசு சார்பில் உணவு வழங்கப்பட்டது. இந்தியா கடந்த 9 மாதங்களாக பெரும் சிக்கலை சந்தித்து வந்துள்ளது. இது எப்போது முடிவுக்கு வரும் என்பது தெரியவில்லை. விரைவில் தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்த பிறகு பள்ளிகள் திறக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.