Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் மேலும் 6 பேர் டிஸ்சார்ஜ்…… குணமடைந்தவர்கள் 11ஆக உயர்வு …!!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 11ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று ஒரே நாளில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 17ஆக உயர்ந்ததால் இதன் எண்ணிக்கை 67ஆகியது. ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்த 5 பேர் குணமடைந்த நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதில் மேலும் 6 பேர் குணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராஜீவ் காந்தி, ஸ்டான்லி, கீழ்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். சென்னையை சேர்ந்த 4 பேரும்  , காஞ்சிபுரத்தை சார்ந்த ஒருவரும் , செங்கல்பட்டு பகுதியை சேர்ந்த ஒருவரும் என கொரோனா சிகிச்சை பெற்று வந்த 6 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளார் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 11ஆக உயர்ந்துள்ளது.

Categories

Tech |