Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் மேலும் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு – பள்ளி மாணவர்களுக்கு தேர்வு ரத்தாக வாய்ப்பு!

கேரளாவில் 4 பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பதால் 7ம் வகுப்பு வரை முன்கூட்டியே கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவை அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. சீனா மட்டுமல்லாமல் தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் இத்தாலி, ஈரான், கனடா உள்ளிட்ட பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த கொரோனா வைரஸ் தாக்குதலால் கொரோனா வைரஸ் தாக்குதலால் இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமான பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் 4,000க்கும் அதிகமானோர் பேர் உயிரிழந்துள்ளனர் தமிழகத்தில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியான நிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கேரளாவில் இன்று 6 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே 6 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கேரளாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 12ஆக அதிகரித்துள்ளது.

இதையடுத்து மாநிலம் முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தபட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேரள மாநிலத்தில் 7-ம் வகுப்பு வரை முன்கூட்டியே கோடை விடுமுறை அளிக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. 7-ம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளுக்கு முழுஆண்டு தேர்வை ரத்து செய்யவும் கேரள அமைச்சரவையில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |