இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் அதிகரித்து வரும் நிலையில் தற்போது 6 முதல் 12 வயது வரை உள்ளவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்த அரசு அனுமதி வழங்கியுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கும், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் ஒன்றிய அரசு அனுமதியுடன் தடுப்பூசி வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து ஒமைக்ரான் வைரஸின் மூன்றாவது அலைக்கும்வாய்ப்பு இருந்த நிலையில் கடந்த 2022ஆம் ஆண்டு ஜனவரி 3 ஆம் தேதி முதல் 15 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பு ஊசி போட்டு வந்தனர். மேலும் 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், பிற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.
இதனை தொடர்ந்து 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என அனுமதி வழங்கப்பட்டதையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் கடந்த சில நாட்களாக அதிகரித்து வரும் நிலையில் தற்போது 6 முதல் 12 வயது வரை உள்ளவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக் கொள்ள நிபுணர் குழு பரிந்துரையின் பேரில் மருந்து காப்பீட்டு இயக்குனரகம் நிபந்தனைகளுடன் ஒன்றிய அரசு அனுமதி வழங்கியுள்ளது.