அரசு பணியை துறந்து சுகாதாரப் பணியில் சாதனை படைத்த மதுரை பெண் அனைவரையும் நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளார்.
அரசுப் பணியை துறந்து சுகாதாரப் பணியில் சாதனை படைத்த பெண் தமிழகத்தின் சுகாதாரத்திற்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்த மதுரை பெண்ணை 6 ஆயிரம் கழிப்பறைகள் கட்டி சாதனை படைத்துள்ளார் அவரது சாதனை பயணத்தை பற்றி தற்போது பார்க்கலாம்.மதுரை மாவட்டம் ஒத்தக்கடை சேர்ந்த திருமதி செல்வி என்பவர் இளம் வயதிலிருந்தே சுகாதாரத்தில் ஆர்வம் கொண்டவராக விளங்கினார். இந்த ஆர்வத்தின் வெளிப்பாடாக பாதாள சாக்கடை அமைக்க கோரிய போராட்டத்தில் அவர் வெற்றி கொண்டார்.
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மானிய விலையில் கழிப்பறை கட்டுவது தொடர்பான நிகழ்வில் பங்கேற்ற அவர் கழிப்பிடங்களில் முக்கியத்துவத்தை உணர்த்தினார். இதுதொடர்பாக பல்வேறு பகுதிகளுக்கு சென்ற அவர் பொதுமக்களை சந்தித்து கழிப்பிடங்களை கட்டுவதன் அவசியத்தை எடுத்துரைத்தார். இதையடுத்து திருப்பரங்குன்றம் வாடிப்பட்டி திருமங்கலம் உள்ளிட்ட ஆறு பகுதிகளில் ஆறு ஆண்டுகளில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கழிப்பறை கட்டிக் கொடுத்து அதற்கான மானியத்தையும் அவர் பெற்றுக் கொடுத்திருக்கிறார்.
பனிரெண்டாம் வகுப்பை பாதியில் நிறுத்திய திருமதி செல்விக்கு அங்கன்வாடி பணியாளருக்கான வேலை கிடைத்த நிலையில் அதைத் துறந்து , சுகாதார பணிகளில் ஈடுபடுகிறார். தற்போது அவர் திருமங்கலம் ஊரக வளர்ச்சித் துறை அலுவலகத்தில் வட்டார ஒருங்கிணைப்பாளர் ஆக உள்ளார். இவருக்கு மத்திய அரசும் , மாவட்ட நிர்வாகமும் விருதுகள் வழங்கி கௌரவித்து உள்ளன. மூன்று குழந்தைகளுடன் உடல்நலக் குறைவால் அவதிப்படும் கணவருடன் வாழ்ந்து வரும் செல்வி தற்போதும் கூட சுகாதார பணிகளில் ஈடுபடுவது பொதுமக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.