Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

எல்லா பொருளையும் உடைச்சிட்டாங்க… என்னையும் மிரட்டுனாங்க… கொலை மிரட்டல் விடுத்த 6 பேர் கைது…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் முன்பகை காரணமாக வீட்டிற்குள் நுழைந்தது கொலை மிரட்டல் விடுத்த 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பகுதியில் உள்ள அரண்மனை தெருவில் தங்கராஜ் பாண்டியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் பெருநாழி பகுதியில் வசிக்கும் சுந்தரபாண்டியன் மற்றும் செந்தில் ஆகியோருக்கும் இடையில் சொத்து பிரச்சனை காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சுந்தரபாண்டியன் மற்றும் செந்தில் அவர்களது கூட்டாளிகள் 4 பேருடன் தங்கபாண்டியனின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

அங்கு சென்று வீட்டில் இருந்த பொருட்களை அடித்து உடைத்து தங்கராஜ் பாண்டியனையும் தாக்கியுள்ளனர். மேலும் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதனையடுத்து அவர் சாயல்குடி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனைத்தொடர்ந்து போலீசார் தங்கராஜை தாக்கிய 6 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |