தமிழகத்தில் கொரோனோவால் பாதிக்கப்பட்ட 6 பேர் இன்று உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 789 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,002ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸால் இன்று மட்டும் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 53ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் கொரோனா வைரஸால் 538 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,371ஆக உயர்ந்துள்ளது.
திருவள்ளூர் – 97, செங்கல்பட்டு – 90, அரியலூர் -33, திருவண்ணாமலை – 10, காஞ்சிபுரம் – 8, மதுரை, ராமநாதபுரத்தில் தலா 4, தஞ்சை – 3, தூத்துக்குடி – 3, தருமபுரி – 2 ,திண்டுக்கல், பெரம்பலூர், கன்னியாகுமரி, ராணிப்பேட்டை, விருதுநகர், வேலூரில் தலா ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று 91 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 2,051ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை 2,43,952 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 11,584 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 5,895 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது 5,195 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.