Categories
உலக செய்திகள்

ராட்டினத்தில் விளையாடிய குழந்தைகள்.. திடீரென்று ஏற்பட்ட விபத்து.. படுகாயங்களுடன் 6 பேர் மீட்பு..!!

பிரிட்டனில் ராட்டினத்தில் கோளாறு ஏற்பட்டதில், குழந்தைகள் உட்பட ஆறு நபர்கள் கீழே விழுந்து பலத்த காயமடைந்துள்ளனர்.

வடக்கு அயர்லாந்தில், இருக்கும் கேரிக்ஃபெர்கஸ் என்ற துறைமுகத்தில் Planet Fun பீலியாட்டு என்ற பூங்கா உள்ளது. இங்கு நேற்று மாலையில் சுமார் 40 அடி உயரம் வரை சென்று சுழலக்கூடிய “Top of the world” என்ற ராட்டினத்தில் சில பேர் விளையாடியுள்ளார்கள். அப்போது திடீரென்று ராட்டினம் அறுந்து தரையில் விழுந்து விட்டது.

இதில் 4 குழந்தைகள் உள்பட 6 நபர்கள் பலத்த காயமடைந்துள்ளார்கள். மேலும் 8 நபர்களுக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளது. எனவே காயமடைந்தவர்களை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இதனைத்தொடர்ந்து பூங்காவை தற்காலிகமாக அடைத்துள்ளனர். விபத்து எதனால் ஏற்பட்டது? என்பது தொடர்பில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Categories

Tech |