Categories
மாநில செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 6 பேர் டிஸ்சார்ஜ்!

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 6 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுவரை 15,512 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு புறம் குணமடைந்து வீடு திரும்புவார்களின் எண்ணிக்கையும் உயர்வது சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் உள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 363 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 7,491 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 48.29% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 6 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடியில் இதுவரை 149 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 36 பேர் குணமடைந்துள்ள நிலையில் தற்போது 111 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல அரியலூர், கோவை, ஈரோடு, நாகை, தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, நாமக்கல், நீலகிரி, பெரம்பலூர், சிவகங்கை, தஞ்சாவூர், திருப்பத்தூர், திருவாரூர், திருப்பூர், திருச்சி, வேலூர் ஆகிய மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

Categories

Tech |