Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

நாளுக்கு நாள் அதிகரிப்பு…. 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…. தீவிரப்படுத்தப்படும் துப்புரவு பணிகள்….!!

ஆறு பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் அப்பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருவையாறு பகுதியில் இருவருக்கும் கழுமங்கலத்தில் ஒருவருக்கும் கருப்பூரில் ஒருவருக்கும் கல்யாணபுத்தில் ஒருவருக்கும் செம்மங்குடி ஒருவருக்கும் மொத்தம் 6 பேர் பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனையடுத்து அந்த 6 பேரும் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தகவலை அறிந்த ஊராட்சி ஒன்றிய ஆணையர் நந்தினி, தாசில்தார் நெடுஞ்செழியன், பேரூராட்சி செயல் அலுவலர் ராஜா, துப்புரவு ஆய்வாளர் செந்தில்குமார், நடுக்காவேரி அரசு மருத்துவமனை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சதாசிவம் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் சம்பந்தப்பட்ட தெருக்களுக்கும் கிராமங்களுக்கும் சென்று துப்புரவு பணியை மேற்கொண்டு கிருமி நாசினி தெளித்துள்ளனர். மேலும் கொரோனா தொற்று ஏற்பட்ட குடும்பத்தில் உள்ளவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டதுடன் தனிமைப்படுத்திக் கொள்ளவும் மேலதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ம்பத்தில் உள்ளவர்களுக்கு பரிசோதனையும் செய்யப்பட்டு செய்யப்பட்டதுடன் தனிமைப்படுத்திக் கொள்ளவும் மேலதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்

Categories

Tech |