Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

காடுகளில் பதுக்கப்பட்ட பொருள்…. தீவிரமடைந்த விசாரணை…. வெளிவந்த உண்மை….!!

2 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்த குற்றத்திற்காக 6 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பட்டங்காடு கடற்கரை பகுதியில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக மணமேல்குடி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அந்த சமயத்தில் அலையாத்தி காடுகளில் 2 கிலோ கஞ்சாவை மூட்டைகளில் கட்டி பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

இதனையடுத்து காவல்துறையினர் அந்த கஞ்சாவை பறிமுதல் செய்து அதனை பதுக்கி வைத்திருந்த சாமியப்பன், ராமு, அன்பழகன், மணிகண்டன், ஸ்ரீராம் உள்ளிட்ட 6 பேரை அதிரடியாக கைது செய்து உள்ளனர். மேலும் இந்த கஞ்சா இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்ததா என்பது குறித்து போலீசார் தொடர்ந்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய 3 பேரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |