மாடுகளைத் திருடிய குற்றத்திற்காக 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அரியலூர் மாவட்டத்திலுள்ள செங்கமேடு மணக்கொல்லை பகுதியில் அருளானந்தம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வயலில் இருக்கும் கொட்டகையில் மாடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் கொட்டகையில் அடைத்து வைத்திருந்த ஒரு ஜோடி மணப்பாறை மாடுகள் திடீரென காணாமல் போனதை அறிந்து அருளானந்தம் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அருளானந்தம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கண்டிகுப்பம் பகுதியில் வசிக்கும் சேவியர், ராஜா, சபரிவாசன், குமார், அருள் மற்றும் 16 வயது சிறுவன் ஆகியோர் இணைந்து மாடுகளை திருடி சென்றது தெரியவந்துள்ளது. அதன்பின் காவல்துறையினர் 6 பேரையும் கைது செய்ததோடு, மாடுகளை பத்திரமாக மீட்டனர்.