மது பாட்டில்களை பதுக்கி வைத்த பணியாளர்கள் 6 பேரை மாவட்ட டாஸ்மாக் மேலாளர் பணியிடை நீக்கம் செய்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஆலங்குளத்தில் ஒரு டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இந்த கடையில் வேலை பார்க்கும் பணியாளர்களும், மேற்பார்வையாளர்களும் இணைந்து சுமார் 30 அடி தூரத்தில் இருக்கும் ஒரு அறையில் மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் டாஸ்மாக் கடைக்கு சென்று சோதனை நடத்தியுள்ளனர். இதனையடுத்து 36 அட்டை பெட்டிகளில் 1188 மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்ததை காவல்துறையினர் பார்த்துள்ளனர்.
அதன்பின் 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மது பாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இந்நிலையில் மேற்பார்வையாளர்களான முருகன், சுப்பையா, சண்முகபாண்டியன், விற்பனையாளர்களான இசக்கிமுத்து, சரவணன், கணேசன் ஆகிய 6 பேரையும் நெல்லை மாவட்ட டாஸ்மாக் மேலாளர் ஷியாம் சுந்தர் பணியிடை நீக்கம் செய்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.