Categories
உலக செய்திகள்

“6 பில்லியன் டாலர்” உலக மக்களின் பசியை போக்கும் திட்டம்…. எலான் மஸ்க் கேள்வி….!!

6 பில்லியன் டாலரில் உலக மக்களின் பசியை போக்கும் திட்டத்தை சொன்னால், டெஸ்லா பங்குகளை விற்று நன்கொடை வழங்குவதாக ஸ்பெஸ் எக்ஸ் நிறுவனர் அறிவித்துள்ளார்.

உலக மக்களின் பசியினை போக்குவதற்காக பெரும் பணக்காரர்களான எலான் மஸ்க் மற்றும் ஜெப் பெசாஸ் தங்கள் சொத்து மதிப்பில் 2 சதவீதத்தை நிதியாக கொடுக்க முன்வர வேண்டும் என உலக உணவுத் திட்டத்தின் தலைவர் டேவிட் பெஸ்லீ தெரிவித்திருந்தார்.

இதற்கு பதில் கூறிய எலான் மஸ்க் 6 பில்லியன் டாலரில் உலக மக்களின் பசியை போக்குவதற்கான திட்டத்தை கூறுமாறு தெரிவித்தார். இந்நிலையில் பொருளாதார நெருக்கடியால் ஏற்படும் மிகப் பெரிய இடப்பெயர்வு, பட்டினியின் விளிம்பில் இருக்கும் 42 மில்லியன் மக்களின் பசியை தடுக்கும் என்று டேவிட் பெஸ்லீ கூறியுள்ளார்.

Categories

Tech |