இன்று முதல் 3 நாட்களுக்கு ஆறு கிரகங்கள் ஒன்று சேரும் வரையில் அதனால் பாதிப்பு ஏற்படும் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
தனுசு ராசியில் இன்று முதல் வரும் 27ஆம் தேதி வரை சூரியன் சந்திரன் குரு சனி புதன் மற்றும் கேது ஆகிய கிரகங்கள் ஒன்றாக சேர்ந்து ராகுவின் பார்வை பெறுவதாகவும், இதனால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் ஜோதிடர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் அறிவியல் பூர்வ ஆதாரம் ஏதும் இல்லை என்று தெரிவித்துள்ள கோளரங்க இயக்குனர் சௌந்தரராஜன் சூரியனை சுற்றும் கோள்கள் அவ்வப்போது ஒன்று சேரும் என்றும் இது பூமியில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்றும் கூறியுள்ளார். 1962 ஆம் ஆண்டு பிப்ரவரி 3 முதல் 8 வரை ராகு தவிர மற்ற கிரகங்கள் மகர ராசியில் ஒன்று சேர்ந்தனர். அப்போது உலகம் அழியும் என்று கூறப்பட்ட நிலையில் அப்படி ஏதும் நிகழவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.