21 வது லீக் போட்டியில் , பஞ்சாப் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதல் .
2021 ம் ஆண்டிற்கான ஐ.பி.எல் தொடரின் , 21 வது லீக் போட்டியில் , பஞ்சாப் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன . இந்த போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்கியது . இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி , பீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.
இதனால் பஞ்சாப் கிங்ஸ் பேட்டிங்கில் களமிறங்கியது .தொடக்க வீரர்களாக கே.ல்.ராகுல் – மயங்க் அகர்வால் ஜோடி களமிறங்கினர் .இதில் கே.ல்.ராகுல் 19 பந்துகளில் 2 பவுண்டரி , 1 சிக்ஸரை அடித்து ,19 ரன்களில் ஆட்டமிழந்தார் .அடுத்து களமிறங்கிய கிறிஸ் கெயில் ரன் எதுவும் எடுக்காமல் , அவுட் ஆனார் . இதனால் பஞ்சாப் அணி 7 ஓவரில் 2 விக்கெட்டை இழந்து 41 ரன்களை எடுத்துள்ளது .
அடுத்ததாக களமிறங்கிய தீபக் ஹூடா 1 ரன் , மயங்க் அகர்வால் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இதன் பிறகு களமிறங்கிய பூரன் 19 ரன்கள் மற்றும் மொய்சஸ் 2 ரன்கள் எடுத்து வெளியேறினர். இதனால் பஞ்சாப் அணி 15 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 82 ரன்களை குவித்துள்ளது .