Categories
மாநில செய்திகள்

பெண் ஐபிஎஸ் பாலியல் விவகாரம்… 6 வாரத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு….!!!

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவல் உயர் அதிகாரி மீதான வழக்கில் ஆறு வாரத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக சிறப்பு டிஜிபி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணை செய்தது. நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் இன்று இந்த வழக்கு விசாரணை வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான குற்றவியல் வழக்கறிஞர் கடந்த ஏப்ரல் மாதத்தில் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது எனவும், அதன் அடிப்படையில் 5 அதிகாரிகள் மற்றும் பிற சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக தெரிவித்தார். மேலும் 113 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளதாகவும் கூறினார்.

ஊரடங்கு காரணமாக அவர்களிடம் தடவியல் அறிக்கை பெற முடியவில்லை என்றும், இன்னும் மூன்று வாரங்களில் கிடைத்துவிடும் என்பதால் புலன் விசாரணையை முடித்து, எழுதி தாக்கல் செய்ய 6 வாரம் அவகாசம் வேண்டும் என அவர் கூறியிருந்தார். அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் தனது அறிக்கையை ஏற்கனவே உள்துறை செயலாளரிடம் சமர்ப்பித்து விட்டதாகவும், அதன் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். பின்னர் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இன்னும் ஆறு வாரத்தில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி, விசாரணையை ஜூலை 30ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |