இ-பாஸ் இல்லாமல் திசையன்விளையிலிருந்து சென்னை செல்ல முயன்ற பெண்கள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்
கொரோனா பரவுவதை தடுக்க மார்ச் மாதம் 27ஆம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து தற்போது 5வது கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் சில தளர்வுகளை அரசு அறிவிக்க அதன்படி தமிழகத்தில் உள்ள மாவட்டங்களை 8 மண்டலங்களாகப் பிரித்து மண்டலங்களுக்குள் வாகனத்தில் செல்ல இ-பாஸ் தேவையில்லை என்றும் மண்டலம் விட்டு மண்டலம் செல்வதற்கு கட்டாயமாகத் இ-பாஸ் தேவை எனவும் அறிவித்திருந்தது.
அவ்வகையில், திருநெல்வேலி மண்டலத்தில் இருக்கும் தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களுக்கு இடையே சென்று வருவதற்கு இ-பாஸ் தேவையற்றதாகி போக, திருநெல்வேலியில் இருந்து பெண்கள் உள்பட 6 பேர் கொண்ட கும்பல் மண்டலம் விட்டு மண்டலம் இ-பாஸ் இல்லாமல் பயணிக்க முயற்சித்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து இ-பாஸ் இல்லாமல் திசையன்விளையில் இருந்து சென்னைக்கு செல்ல முயற்சி செய்த சென்னை மதுரவாயலை சேர்ந்த தாமோதரன், திசையன்விளையை சேர்ந்த முத்துராஜ், மகாதேவன்குளத்தை சேர்ந்த முத்துராஜ், பிச்சைமணி மகள் முத்து சூர்யா, முத்துகிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த காளிதாஸ் மனைவி பஞ்சவர்ணம், வேல்முருகன் என்பவரது மனைவி விஜயகுமாரி ஆகிய 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்கள் சென்னை செல்வதற்கு பயன்படுத்திய டெம்போ வேனையும் பறிமுதல் செய்தனர்.