அமெரிக்காவில், சிறுவன் மாடியிலிருந்து கீழே விழுந்த நிலையில், அதே வீட்டில் பெண் தூக்கில் தொங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வசித்த Rebecca Zahau என்ற பெண், Jonah Shacknai என்பவரை காதலித்திருக்கிறார். Jonah-விற்கு 6 வயதில் Max என்ற மகன் இருந்திருக்கிறார். அதன்பின்பு, Rebecca, Jonahவின் வீட்டில் அவருடன் வசிக்க தொடங்கியதால், அவர் Max-ஐ நன்றாக கவனித்துக்கொண்டார்.
அப்போது, ஒருநாள் திடீரென்று அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதனால், Rebecca பதறியடித்து ஓடி வந்து பார்த்தபோது, சிறுவன் Max மாடியிலிருந்து கீழே விழுந்து சுயநினைவின்றி கிடந்திருக்கிறார். இதனால், உடனடியாக சிறுவனை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அதன்பின்பு, Jonah தன் மகனுடன் மருத்துவமனையில் தங்கியிருந்திருக்கிறார். எனவே, Jonah-வின் சகோதரர், Adam Shacknai, மற்றும் Rebecca இருவரும் வீட்டிற்கு சென்றுள்ளனர்.
அதற்கு அடுத்த நாள் காலையில், Adam அவசரமாக காவல்துறையினரை தொடர்புகொண்டு, வீட்டில் Rebecca தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதாக பதற்றமாக கூறியுள்ளார். மேலும், அவர் Rebecca-வை எழுப்ப முயற்சிக்கும் சத்தமும் கேட்டதால், காவல்துறையினர் அவரின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு, Rebecca, ஆடைகளின்றி கைகள் பின்புறம் கட்டப்பட்டு, வாயில் துணியுடன் உயிரிழந்து கிடந்துள்ளார்.
மேலும், வீட்டின் சுவரில், “அவனை அவள் காப்பாற்றி விட்டாள்”, “அவளை உன்னால் காப்பாற்ற முடியுமா?” என்று எழுதப்பட்டிருந்துள்ளது. Rebecca, தான் கவனிக்காமல் விட்டதால் தான் சிறுவன் காயமடைந்ததாக கருதி குற்ற உணர்வில் தற்கொலை செய்ததாக Adam தெரிவித்துள்ளார். இதனிடையே, சுயநினைவின்றி மருத்துவமனையில் இருந்த சிறுவன் Max உயிரிழந்துவிட்டார்.
இதனால், அன்று வீட்டில், சிறுவனுக்கு என்ன நடந்தது? என்பதே தெரியாமல் போனது. எனினும், Rebecca, கைகள் மற்றும் கால்களை கட்டிக்கொண்டு எப்படி தற்கொலை செய்ய முடியும்? என்றும் ஆடையின்றி நிர்வாணமாக எதற்காக தூக்கில் தொங்க வேண்டும்? என்றும் அவரின் குடும்பத்தார் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.
எனவே, Adam தான் Rebecca-வை தாக்கி, தூக்கில் தொங்க விட்டிருக்கலாம் என்று அவர்கள் தெரிவித்துள்ளார்கள். இதனால், Adam தான் குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்மானித்து, 5 மில்லியன் டாலர்கள், அவர் Rebecca-வின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது.
எனினும், Adam, தான் எந்த தவறும் செய்யவில்லை என்று தொடர்ந்து கூறிவருகிறார். அப்படியென்றால், சிறுவர் எப்படி கீழே விழுந்தார்? சுவரில் யார் வார்த்தைகளை எழுதி வைத்தார்கள்? என்ற பல சந்தேகங்கள் எழுந்திருக்கிறது.