பிரிட்டனில் மாயமானதாக தேடப்பட்டு வந்த 6 வயதுடைய சிறுமி வயல்வெளியில் தனியாக தூங்கிக்கொண்டிருந்த போது காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
இங்கிலாந்தில் இருக்கும் டெவோன் கவுன்டியின் வடக்கு டெவோன் பகுதியை சேர்ந்த ஒரு பெற்றோர் கடந்த சனிக்கிழமை அன்று இரவு, காவல்துறையினருக்கு தொடர்பு கொண்டு, தங்களின் 6 வயது மகள் பண்ணை வீட்டிலிருந்து மாயமானதாக பதற்றத்துடன் தெரிவித்துள்ளனர்.
அவர்களின், வீட்டை சுற்றி முழுவதும் வயல் வெளி இருந்ததால் அவர்கள் மிகவும் பயந்தனர். எனவே காவல்துறையினர் உடனடியாக அந்த பகுதிக்கு விரைந்து சென்று சிறுமியை தீவிரமாக தேடி வந்தனர். மேலும் தேசிய காவல் விமான சேவை (NPAS) வரவழைக்கப்பட்டது. அதன் பின்பு காவல்துறையினர் NPAS ஹெலிகாப்டர் உதவியோடு, அகச்சிவப்பு கேமராவை வைத்து வயல் பகுதிகளில் தேடியிருக்கிறார்கள்.
அப்போது, வயல்வெளியில் கருப்பு உருவம் போன்று தெரிந்துள்ளது. அங்கு மாயமான சிறுமி தனியாக படுத்து தூங்கி கொண்டிருந்துள்ளார். அதன்பின்பு வாகனத்தில் சென்ற காவல்துறையினர் சிறுமியை பாதுகாப்பாக மீட்டு வந்தனர்.