திண்டுக்கல்லில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் சிறுமியை மர்ம நபர்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே கணவன் மனைவி இருவர் தனியார் நூற்பாலையில் வேலை செய்துவருகின்றனர். இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகனும், 6 வயதில் ஒரு மகளும் உள்ளனர். பத்து வயது மகன் அதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியில் ஐந்தாம் வகுப்பும், மகள் ஒன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று விடுமுறை தினத்தன்று தாய் வேலைக்கு செல்ல தந்தை உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் வீட்டில் இருந்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்.
இந்நிலையில் அண்ணனிடம் விளையாட செல்வதாக கூறி வெளியே சென்ற சிறுமி திரும்பி வீட்டிற்கு வரவே இல்லை. பின் தாய் வீட்டிற்கு வந்ததும் எங்கு தேடியும் சிறுமி காணாததால் ஊருக்கு வெளியில் தேடியுள்ளார். அங்கு டிராக்டர் ஒன்றின் அருகே தலையில் பலத்த காயத்துடன் மயங்கி கிடந்துள்ளார் சிறுமி. இதைக்கண்டு பதட்டத்துடன் அவரை தூக்கிக் கொண்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு பெற்றோர்கள் சென்றனர்.
அங்கு அவரை சோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக கூற காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியதில் அவர் சில மர்ம நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்ததையடுத்து யார் இந்த குற்ற செயலில் ஈடுபட்டார்கள் என்பது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளும் அதிகாரிகள், மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.