காஷ்மீரில் ஆன்லைன் வகுப்புகள் நீண்ட நேரம் எடுப்பதாக 6 வயது சிறுமி புகார் அளித்ததை தொடர்ந்து அம்மாநில கவர்னர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
காஷ்மீரை சேர்ந்த ஆறு வயது சிறுமி ஆன்லைனில் நீண்ட நேரம் வகுப்புகள் எடுப்பதாக வீடியோ மூலம் பிரதமர் மோடியிடம் புகார் அளித்தார். இதையடுத்து பள்ளி குழந்தைகளுக்கான சுமையைக் குறைப்பதற்கு 48 மணி நேரத்தில் கொள்கை வகுக்கப்படும் என்று ஜம்மு காஷ்மீர் துணைநிலை கவர்னர் மனோஜ் சின்கா உறுதியளித்தார்.
இதையடுத்து ஆன்லைன் வகுப்புகளுக்கான புதிய கட்டுப்பாடுகளை அவர் வெளியிட்டார். அதன் படி தொடக்கக் கல்வி வகுப்பு மாணவர்களுக்கு தினசரி அரை மணி நேரமும், தொடக்க, நடுநிலை பள்ளிகளுக்கு ஒன்றரை மணி நேரமும், 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 3 மணி நேரமும் வகுப்புகள் நடத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.