Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் பயங்கரம்…. கடும் புயலில் சிக்கி… மரத்தில் தொங்கிய 6 வயது சிறுமி…!!!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கடும் புயலில் சிக்கிய 6 வயது சிறுமி மரத்தில் தலைகீழாக தொங்கியபடி மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் கடுமையாக புயல் வீசியதில் 6 வயதுடைய Miriam Rios என்ற சிறுமி, தன் குடியிருப்பிலிருந்து நூற்றுக்கணக்கான அடி தொலைவில் தூக்கி வீசப்பட்டிருக்கிறார். அவர் குடும்பத்தினரின் வீடு முற்றிலுமாக சேதமடைந்திருக்கிறது. அந்த புயல் ஒரு மணி நேரத்திற்கு 165 மைல்கள் வேகத்தில் வீசியது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

சிறுமி மட்டுமல்லாமல் அவரின் தாய், தந்தை மற்றும் ஒரு வயது தம்பி அனைவரும் வீசப்பட்டிருக்கிறார்கள். மேலும், சிறுமியின் தாயார் கர்ப்பமாக இருந்திருக்கிறார். புயலில் தூக்கி வீசப்பட்டவுடன் அவருக்கு கருச்சிதைவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மீதமுள்ள  குடும்பத்தினர் அனைவருக்கும் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அவர்களுக்கு இடுப்பு எலும்பில் முறிவு ஏற்பட்டதோடு, முதுகுத் தண்டில் காயம் ஏற்பட்டு  அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே, சிகிச்சைக்காக அவரது உறவினர்கள் நிதி திரட்ட தொடங்கியுள்ளனர்.

Categories

Tech |