கிறிஸ்துமஸை முன்னிட்டு ராமநாதபுரம் பேக்கரி ஒன்றில் மறைந்த கால்பந்து வீரர் மாரடோனா உருவத்தில் தயாரிக்கப் பட்ட பிரமாண்டமான கேக் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்து வருகிறது. ராமநாதபுரத்தில் உள்ள பேக்கரி ஒன்றில் கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை முன்னிட்டு அண்மையில் மறைந்த சர்வதேச கால்பந்து வீரர் மாரடோனா முழு உருவ கேக் சிலை உருவாக்கப்பட்டு பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
6 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த கேக்கை 60 கிலோ சர்க்கரை மற்றும் 270 முட்டைகள் கொண்டு நான்கு நாட்களில் தயாரிக்கப்பட்டதாக பேக்கரி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். மாரடோனா மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும், குழந்தைகள் ஆன்லைனில் விளையாடுவதை தவிர்க்கவும் இந்த பிரமாண்ட கேக் உருவாக்கப்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.