திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கூத்தாண்ட குப்பம் கரியன் வட்டம் பகுதியில் வசிக்கும் நந்தகுமார், ராமச்சந்திரன், சுந்தர் ஆகிய 3 பேரும் பெங்களூரில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களது உறவினர் நேற்று முன்தினம் இறந்து விட்டார். இதனால் இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக 3 பேரும் காரில் ஊருக்கு வந்துவிட்டு பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
இந்நிலையில் கூத்தாண்ட குப்பம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி ரவிச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான 60 அடி ஆழ விவசாய கிணற்றில் விழுந்தது. உடனடியாக மூன்று பேரும் கார் கண்ணாடிகளை உடைத்து கொண்டு லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதனையடுத்து கிரேன் வரவழைக்கப்பட்டு 4 மணி நேர போராட்டத்திற்கு பிறகு கார் மீட்கப்பட்டது.