Categories
மாநில செய்திகள்

60 நாட்களுக்குள் முடிக்க வேண்டும்…. பதிவுத்துறை ஐஜி உத்தரவு….!!!!

தமிழகத்தில் 575 சார்பதிவாளர் அலுவலகங்கள் மூலம் வீடு, விளை நிலங்கள் உள்ளிட்ட சொத்து பரிமாற்றங்கள் பதிவு செய்யப்படுகிறது. அவ்வாறு பதிவு செய்யப்படும் ஆவணங்களின்போது, சார்பதிவாளர்கள் சிலர் மூலபத்திரங்களை வாங்கி ஆய்வு செய்யாமல் பதிவு செய்கின்றனர். இதை பயன்படுத்தி கொண்டு சமூக விரோதிகள் சிலர் போலி ஆவணங்களை தயாரித்து பத்திரப்பதிவு செய்வதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பதிவுத்துறையின் குறைதீர் மையத்துக்கு ஏராளமான புகார்கள் வருவதாக தெரிகிறது.

இந்நிலையில் போலி ஆவண பதிவு தொடர்பான புகார்கள் மீதான விசாரணையை 60 நாட்களுக்குள் முடிக்க வேண்டும் என பத்திரப்பதிவுத்துறை ஐசி சிவன் அருள் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் உள்ள சார்பதிவாளர்கள் அலுவலகங்களில் வீடு, விளை நிலங்கள் உள்ளிட்ட சொத்து பரிமாற்றங்கள் பதிவு செய்யப்படும்போது போலி ஆவணங்கள் வருவதாக தொடர்ந்து புகார் எழுந்ததால், இதுகுறித்த விசாரணையை நடத்த உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |