Categories
சினிமா தமிழ் சினிமா

60- நாள்ல என்ன பண்ணுணீங்க?… பிக்பாஸ் கேட்ட கேள்வி… பதில் சொல்ல திணறும் போட்டியாளர்கள் …!!

பிக்பாஸ் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் போட்டியாளர்கள் திணறும் மூன்றாம் புரோமோ வெளியாகியுள்ளது.

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் 60 நாட்கள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் இன்றைய மூன்றாவது புரோமோவில் இந்த 60 நாட்களில் பிக்பாஸ் வீட்டில் நீங்கள் என்ன செய்தீர்கள்? என்பதை உங்கள் ரசிகர்களிடம் சொல்லுங்கள் என பிக்பாஸ் கேட்கிறார். இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் போட்டியாளர்கள் திணறுகின்றனர் . இந்தக் கேள்விக்கு கொஞ்சம் டைம் எடுத்துக்கலாமா? என ஜித்தன் ரமேஷ் கேட்கிறார்.

திடீரென்று கேட்டா  எப்படி சொல்வது? என யோசிக்கிறார் ஆஜித். பஸ்ஸர் எப்போ அடிக்கும் ?என கேட்கிறார் ஷிவானி. மற்றும் கேபி தலையை குனிந்து சிரிக்கிறார். இதையடுத்து இந்த 60 நாட்களில் நீங்கள் செய்த ஒன்று கூட ஞாபகம் வரவில்லையா? என கேட்டதோடு மீண்டும் இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்காது என்கிறார்  பிக்பாஸ். இதன்பின் அனிதா நான் எல்லாருக்கும் ஹேர்ஸ்டைல் செய்திருக்கிறேன் என சமாளிக்கிறார் . இன்று வெளியான இந்த மூன்றாவது புரோமாவால் பிக்பாஸ் வீட்டில் 60 நாட்களாக என்ன செய்தோம் என்று கூட சொல்லத் தெரியவில்லை என ரசிகர்கள் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |