மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம் குறித்த ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்தியாவில் முதியவர்கள் தங்களுடைய ஓய்வு காலத்திற்கு பிறகு ஒரு நிரந்தரமான வருமானத்தை விரும்புவார்கள். இதற்காக ஃபிக்ஸட் டெபாசிட்டையே அதிக அளவில் தேர்ந்தெடுக்கிறார்கள்.இவர்கள் மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் பங்குச்சந்தை முதலீடுகளை விரும்புவதில்லை. இவர்கள் ஆபத்து இல்லாத பாதுகாப்பான சேமிப்பு திட்டங்களை விரும்புகின்றனர்.
இந்த பாதுகாப்பான சேமிப்பு திட்டங்களுக்கு வங்கி மற்றும் அஞ்சல் துறையே சிறந்ததாகும். இதற்காக மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டம் 60 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு மட்டுமே பொருந்தும். அதாவது இந்த திட்டத்தில் சேமிப்பு கணக்கு தொடங்க விரும்புபவர்கள் கட்டாயமாக 60 வயது பூர்த்தி செய்தவராக அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவராக இருக்க வேண்டும்.
இவர்கள் சேமிப்பு கணக்கு தொடங்குவதன் மூலம் அஞ்சலகம் அல்லது வங்கியிலிருந்து நம்பிக்கையான வருமானத்தை பெறலாம். இந்த சேமிப்பு திட்டத்தில் ஒருவர் குறைந்தபட்சம் 1,000 ரூபாயிலிருந்து கணக்கைத் தொடங்கலாம். இதில் அதிகபட்சமாக 15 லட்சம் வரை சேமிக்க முடியும்.
இதன் மூலமாக வட்டி 7.5 சதவீதம் வழங்கப்படுகிறது. இந்த வட்டி தொகையானது டெபாசிட் செய்த தேதியிலிருந்து காலாண்டு அடிப்படையில் டிசம்பர் 31, செப்டம்பர் 30, ஜூன் 30, மார்ச் 31 போன்ற தேதிகளில் வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் அதிகப்படியாக டெபாசிட் செய்யப்பட்டால் உடனடியாக அந்த தொகை திருப்பித் தரப்படும். இந்த திட்டத்தின்படி முதிர்வு காலம் 5 ஆண்டுகள் ஆகும்.
இந்த சேமிப்பு திட்டத்தின் கீழ் 50,000 ரூபாய்க்கு மேல் வட்டி இருந்தால் அதற்கு வரி வசூலிக்கப்படும். இந்தத் திட்டத்தில் ஒரு வருடத்திற்கு முன்பாக சேமிப்பு திட்டம் மூடப்பட்டால் அதற்கு வட்டி வழங்கப்படாது. அதற்கு முன்பாக ஏதேனும் வட்டி வழங்கப்பட்டிருந்தாலும் அந்த தொகை திருப்பி வாங்கப்படும்.
இதனையடுத்து சேமிப்பு திட்டம் தொடங்கியவர் ஒருவேளை இறந்துவிட்டால், அவர் இறந்த தேதியை கணக்கிட்டு அதில் இருந்து வட்டி வழங்கப்படும். மேலும் சிவில் பணியாளர்கள் 55 வயதுக்கு மேல் மூத்த குடிமக்களுக்கான திட்டத்தை தொடங்கலாம். அதன்பிறகு பாதுகாப்பு பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் 50 வயதிற்கு மேல் இந்த திட்டத்தை தொடங்க தகுதியானவர்கள் ஆவர்.