நாடு முழுவதும் கொரோனா பரவல் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு விஞ்ஞானிகள் தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவில் கோவாக்சின் மற்றும் கோவிஷீயீல்டு தடுப்பு மருந்துகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு முன் களபணியாளர்களுக்கு போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் மக்களிடையே தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் அரசியல் தலைவர்களும் தடுப்பூசி போட்டு வருகின்றனர் .
இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்திக் கொண்டார். இதையடுத்து இது குறித்து கூறிய அவர், “60 வயதிற்கு மேல் உள்ள அனைவருமே தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் எனவும், அரசு நெறிமுறைகளை பின்பற்றி கொரோனாவை தடுக்க ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.