Categories
தேசிய செய்திகள்

60 வயது வரை முழு சம்பளம், காப்பீடு, கல்வி – வாவ் அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. மேலும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கும், பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கும் பல்வேறு மாநில அரசுகளும் நிதி உதவியையும், பல சலுகைகளையும் அறிவித்து வருகின்றன.

இந்நிலையில் டாட்டா ஸ்டீல் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் யாராவது கொரோனாவால் உயிரிழந்தானல் அவர்களுடைய குடும்பத்திற்கு ஊழியர் ஓய்வு பெறும் வயது வரை அவரின் சம்பளம் முழுமையாக ஒவ்வொரு மாதமும் அளிக்கப்படும் என்று டாடா நிறுவனம் அறிவித்துள்ளது. ஊழியர் குடும்பத்திற்கு மருத்துவ காப்பீடு, தங்கும் வசதிகள், முன் களப்பணியாளர்கள் இறந்தால் குடும்பத்தில் பிள்ளைகள் பட்டம் பெரும் வரை கல்வி செலவை நிர்வாகமே ஏற்கும் என்று கூறியுள்ளது.

Categories

Tech |