இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் 12 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கோவக்சின் தடுப்பூசி செலுத்துவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.
இந்நிலையில் 60 வயதை கடந்தவர்கள் மற்றும் இணைநோய் உள்ளவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி ஜனவரி 10ஆம் தேதி முதல் பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணி தொடங்கப்படும். மேலும் பூஸ்டர் தடுப்பூசிக்கு கோவின் இணையதளம் மூலம் முன்பதிவு செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.