60 வருடங்களுக்கு முன்பு கொரோனா வைரஸ் வேறு வடிவத்தில் அடையாளம் காணப்பட்டதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் தற்போது அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் 1960ம் வருடம் வேறு ஒரு வடிவத்தில் அடையாளம் காணப்பட்டதாக கொழும்பு மருத்துவமனை மருத்துவர் ஜானகி சேனாநாயக் தெரிவித்துள்ளார். இவர் சமூக ஊடக கலந்துரையாடலில் பேசும்போதே இது குறித்து கூறியுள்ளார். முதன்முதலில் 1960ம் வருடம் கண்டுபிடிக்கப்பட்ட இந்த கொரோனா வைரஸ் பல்வேறு முறையில் வளர்ந்து தற்போது பெரும் தொற்று நோயாக வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த வைரஸின் பாதிப்பை தங்களால் இயன்ற வரை தீர்க்க முடியும். மேலும் இது உலக அளவில் ஒரே நேரத்தில் பரவிய ஒரு வைரஸ் என்று கூறியுள்ளனர்.
சீனாவில் முதலில் அடையாளம் காணப்பட்ட நபரை தாக்கியது சார்ஸ் வைரஸ் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த சார்ஸ் வைரஸ் 2012ம் வருடம் சவுதியில் வேறுவிதமாக இந்த வைரஸ் பரவியுள்ளது. அதனையடுத்து 24 நாடுகளுக்கு பரவியுள்ளது. மேலும் 2015ம் வருடம் சீனாவில் இருந்து சார்ஸ் வைரஸ் அடையாளம் காணப்பட்டதையடுத்து 2020ம் வருடம் கொரோனா வைரஸ் தொற்றாத மாற்றமடைந்துள்ளது. மேலும் இந்த கொரோனா வைரஸ் சில நாடுகளில் நிரந்தரமாகவே தங்கி விடலாம் என்று ஜானகி சேனாநாயக் எச்சரிக்கை விடுத்துள்ளார்.