60 வயதை தாண்டிய போதிலும் துடிப்புடனும், இளமையுடனும் செயல்பட வைக்கக்கூடிய பானம் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.
இந்த காலகட்டத்தில் வயது 40ஐ தாண்டும் பட்சத்திலேயே பலரால் வயதானவர்கள் போல அனைத்து வேலைகளையும் துடிப்புடன் செய்ய முடிவதில்லை. வயதான தோற்றம் முகத்தில் காட்டிக் கொடுத்து விடுகிறது. இந்த பிரச்சனை எல்லாம் நீங்க, ஒரு மூடி துருவிய தேங்காய் மற்றும் நறுக்கிய 2 நெல்லிக்காய் ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு தண்ணீர் விட்டு நன்றாக அரைக்கவும்.
பின் முழு சாற்றையும் பிழியும் அளவிற்கு எடுத்து அதை வடிகட்டி குடித்தால் சுவையுடன் இருக்கும். இந்த பானம் குடிப்பதால், உடல் சூடு தணியும். உடலை இளமையாக வைத்துக்கொள்ளும். இதயம் முழுவதும் சீரான ரத்த ஓட்டம் அதிகரிக்கும். சிறுநீரகம் , கண்கள், எலும்புகள் ஆரோக்கியத்திற்கு மிக நல்லது. வயதானாலும் ஆரோக்கியமான வாழ்க்கையை மேற்கொள்ள இந்த பானம் மிக சிறப்பாக உதவும்.