Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

பூமிக்குள் இறங்கிய 60 அடி ஆழ விவசாய கிணறு…. மூழ்கும் நிலையில் தென்னை மரங்கள்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ராமாபுரம் பகுதியில் ஸ்ரீதர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான 5 ஏக்கர் விவசாய நிலத்தில் 60 அடி ஆழ கிணறு இருக்கிறது. கடந்த சில நாட்களாக அப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருப்பதால் அந்த கிணறு திடீரென பூமிக்குள் இறங்கியதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்புதுறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புத்துறையினர் கிணற்றுக்கு அருகில் இருக்கும் குடியிருப்பு வாசிகளை வீடுகளில் இருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தியுள்ளனர். அந்த கிணற்றுக்கு அருகில் இருக்கும் 10-க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் மூழ்கும் நிலையில் இருப்பதால் தீயணைப்பு வீரர்கள் மரங்களை வெட்டி அப்புறப்படுத்தி கிணற்றை மூட நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதுகுறித்து அறிந்த ஆம்பூர் வில்வநாதன் எம்.எல்.ஏ., வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று கிணற்றை ஆய்வு செய்துள்ளனர்.

Categories

Tech |