தன்னை விட உயரமான தொலைக்காட்சியை திருடிச் சென்ற பெண், சிசிடிவி கேமராவில் சிக்கிக் கொண்டார்.
ப்ளோரிடாவில் பட்டப்பகலில் தன்னை விட உயரமாக இருக்கின்ற தொலைக்காட்சி பெட்டியினை ஒரு பெண் திருடி செல்லக்கூடிய காட்சி கேமராவில் பதிவாகியுள்ளது. அப்பெண் பல சிறிய பொருள்களையும், 60 இன்ச் பிளிப்ஸ் தொலைக்காட்சியையும் திருடிக்கொண்டு தள்ளுவண்டியில் ஏற்றி கடையைவிட்டு புறப்பட்டுள்ளார். அக்கடையில் உள்ள அனைவரையும் ஏமாற்றி வெளியேறிய பெண்ணினை அங்கு நின்று கொண்டிருந்த பாதுகாவலர் தொலைக்காட்சிப் பெட்டிக்கான ரசீதை தருமாறு கேட்டிருக்கின்றார்.
அப்போது அவரிடம் பலவிதமாகப் பேசி சமாளித்து விட்டு அங்கிருந்து ஓடிய பெண்ணுடன் வந்திருந்த மற்றொரு பெண்ணும் சிறிய பொருட்களை திருடிக்கொண்டு ஓட்டம் பிடித்துள்ளனர். இச்சம்பவம் பற்றி போலீசாரிடம் புகார் அளித்த நிலையில், காவல்துறையினரால் இதனை ஏற்றுக் கொள்ளவே இயலவில்லை. அதனைத் தொடர்ந்து சிசிடிவி கேமராவில் அப்பெண் தொலைக்காட்சியை எடுத்துச் செல்வது பதிவாகியுள்ளது. அதனைத்தொடர்ந்து போலீசார் தீவிரமாக அப்பெண்ணினை தேடி வருகின்றனர்.