Categories
உலக செய்திகள்

60 பேர் கட்டாய மதமாற்றம் …. சர்ச்சையை கிளப்பிய சம்பவம் ….பிரபல நாட்டில் பரபரப்பு ….!!!

பாகிஸ்தான் நாட்டில் இந்துக்கள் வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்ட சம்பவம்  பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

பாகிஸ்தான் நாட்டில் சுமார் 4.5 மில்லியன் இந்து மதத்தை சேர்ந்த மக்கள் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் சிந்து மாகாணத்தில் வசித்து வருகின்றன. இந்நிலையில் சிந்து மாகாணத்தில் உள்ள மால்டி பகுதியில் சுமார் 60 இந்துக்கள் வலுக் கட்டாயமாக இஸ்லாம் மதத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். இந்த மத மாற்றம் நகராட்சி தலைவர் அப்துல் ரவூப் நிஜாமணி  முன்னிலையில் நடந்துள்ளது.

இதுகுறித்து  பேஸ்புக் பக்கத்தில்,”60 பேர்  இஸ்லாத்தை எனது  கண்காணிப்பில் ஏற்றுக் கொண்டனர் என்றும், அவர்களுக்காக தயவுசெய்து ஜெபிக்கவும்” என்று அதில் பதிவிட்டுள்ளார். இதையடுத்து அவர் பதிவிட்ட ஒரு வீடியோ ஒன்றில்,’ இஸ்லாமிய மதகுருவுடன், இந்துக்கள் கலிமா ஓதிக் காண்பிப்பதையும் ,அவர்களை முழு மத மாற்றத்தை  உறுதி செய்வதையும்” பதிவிட்டுள்ளார் . இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது .

Categories

Tech |