60 வயதான பெண்ணை, கொலை செய்துவிட்டு, அந்த சடலத்துடன் உடலுறவு கொண்ட 19 வயதான சைக்கோ வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்தியாவில் நிகழும் பாலியல் குற்றங்கள் அவ்வப்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக இருக்கின்றது. ஆனால் பாலியல் வன்கொடுமை குற்றத்தை அடுத்த நிலைக்கு நகர்த்திச் சென்ற சம்பவம் ஒன்று ராஜஸ்தானில் நடந்திருக்கிறது. ராஜஸ்தான் மாநிலம் பிலிபங்க காவல் நிலைய எல்லை பகுதியில் தான் இந்த அதிர வைக்கும் சம்பவம் நடந்திருக்கிறது. வியாழக்கிழமை அன்று கணவரை இழந்த 60 வயது விதவை பெண் வீட்டினுள் நுழைந்த 19 வயது வாலிபர் அந்தப் பெண்மணியை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்துள்ளார். அதற்கு அந்தப் பெண் எதிர்ப்பு தெரிவித்து போராடியுள்ளார். அதனால் ஆத்திரத்தில் அந்த பெண்ணை வாலிபர் கொலை செய்திருக்கிறார். அதன் பின்னர் தன்னுடைய காம இச்சையை அந்தப் பெண்ணின் சடலத்துடன் நிகழ்த்தி இருக்கிறார் . கொல்லப்பட்ட அந்த பெண்ணின் சடலத்துடன் உடலுறவு வைத்துள்ளார் . அதுமட்டுமின்றி இச்சம்பவம் பற்றி அந்தப் பெண்ணின் உறவினரிடமும் அந்த வாலிபர் கூறியுள்ளார் . அதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண்ணின் உறவினர் உடனடியாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த இளைஞரின் மேல் நெக்ரோபிலியா மற்றும் கொலை போன்ற பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளன . இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் எற்படுத்தியுள்ளது.
Categories