Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

600 டி20 போட்டிகள்….. “முதல் வீரர் இவர் தான்”….. பொல்லார்ட் உலக சாதனை…!!

மேற்கிந்தியத் தீவுகளின் முன்னாள் ஆல்ரவுண்டர் கெய்ரன் பொல்லார்ட்  600 டி20 போட்டிகளில் விளையாடிய முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் வெஸ்ட் இண்டீஸ் வீரர் பொல்லார்டு.. இந்நிலையில் லார்ட்ஸில் நடைபெற்று வருகிறது தி ஹன்ட்ரட் (The Hundred league) 100 பந்துகள் கொண்ட  கிரிக்கெட் தொடர். இந்த தொடரில் மான்செஸ்டர் ஒரிஜினல்ஸுக்கு எதிராக லண்டன் ஸ்பிரிட் அணி ஆடியது. இதில் லண்டன் ஸ்பிரிட் அணிக்காக ஆடிய பொல்லார்ட் தனது அதிரடி பேட்டிங்கால்  11 பந்துகளில் ஒரு பவுண்டரி மற்றும் 4 பெரிய சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காமல் 34 ரன்கள் எடுத்தார்.

இதன் மூலம் பொல்லார்டு 600 டி20 போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இவர் சிறந்த டி20 புள்ளிவிவரங்களைக் கொண்டுள்ளார். அவர், 600 ஆட்டங்களில் 31.34 சராசரியில் 11,723 ரன்கள் எடுத்துள்ளார். அவர் 104 ரன்கள் எடுத்துள்ளார். பொல்லார்ட் ஒரு சதம் மற்றும் 56 அரை சதங்கள் அடித்துள்ளார். 4/15 என்ற சிறந்த பந்துவீச்சுடன் 309 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.

இது தவிர, வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 101 டி20 சர்வதேச போட்டிகளில் பொல்லார்டு களம் இறங்கியுள்ளார். இதன் போது மொத்தம் அவர் 1,569 ரன்களை குவித்துள்ளார். அதிகபட்சமாக 75 ரன்கள் எடுத்துள்ளார். மொத்தமாக 69 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். அவருக்கு அடுத்ததாக டுவைன் பிராவோ (543 போட்டிகள்), சோயப் மாலிக் (472), கிறிஸ் கெய்ல் (463), ரவி போபாரா (426) ஆகியோர் உள்ளனர்.

பல ஆண்டுகளாக பொல்லார்டு பல T20 தொடர்களில் விளையாடி வருகிறார் .. குறிப்பாக மேற்கிந்திய தீவுகள், உள்நாட்டு அணியான டிரினிடாட் மற்றும் டொபாகோ, இந்தியன் பிரீமியர் லீக்கில் மும்பை இந்தியன்ஸ், அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் மற்றும் பிக் பாஷ் லீக்கில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ், டாக்கா கிளாடியேட்டர்ஸ் மற்றும் டாக்கா டைனமைட்ஸ் பிரீமியர் லீக் (பிபிஎல்), பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் கராச்சி கிங்ஸ், முல்தான் சுல்தான்ஸ் மற்றும் பெஷாவர் சல்மி, கரீபியன் பிரீமியர் லீக்கில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் (சிபிஎல்) ஆகிய அணிகளுடன் இருந்துள்ளார்.

லண்டன் ஸ்பிரிட் அணிக்காக ஆடிய பொல்லார்டின் தாக்குதலால் அவரது அணி 100 பந்துகளில் 160/6 ரன்களை எடுத்தது. கேப்டன் இயோன் மோர்கன் (37) மற்றும் தொடக்க ஆட்டக்காரர் சாக் க்ராலி (41) ஆகியோரின் பங்களிப்பும் வந்தது. மான்செஸ்டர் ஒரிஜினல்ஸ் அணியால் 108 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. லண்டன் ஸ்பிரிட் அணியின் முன்னணி பந்துவீச்சாளராக ஜோர்டான் தாம்சன் 21 ரன்கள் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். இதனால் லண்டன் ஸ்பிரிட் அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |