தமிழகத்தில் நேற்று முதல் 1-8 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள இந்நிலையில் சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சென்னை சைதாப்பேட்டை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு இனிப்புகளை வழங்கி வரவேற்பு தெரிவித்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2020 ஆம் ஆண்டு மார்ச் 24 முதல் பள்ளிகள் 600 நாட்கள் மூடப்பட்டதால் மாணவர்களின் கல்வி மறுக்கப்பட்டு அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகிவிட்டனர்.
அதனைத்தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் நேற்று காலை மடுவின்கரையில் உள்ள பள்ளி மாணவர்களை வரவேற்றார். அதன் பிறகு மாணவர்கள் முதல்வரை வரவேற்றது இந்திய வரலாற்றில் பொன்னெழுத்தில் பொறிக்கப்பட வேண்டிய நிகழ்வாகும். இங்கு எட்டாம் வகுப்பில் 20 மாணவிகள் பயில்கின்றனர். அவர்களிடம் பொது அறிவு கேள்விகள் கேட்டு பரிசுகளை வழங்கி 20 மாணவிகளும் பரிசுகள் பெற்றனர். இதன் மூலம் மாணவர்களின் கல்வி அறிவு குறையவில்லை என்று தெரிந்துள்ளது.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பிறகு கொரோனா பரவலை கட்டுப்படுத்த 5 மாதங்களாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் இதுவரை 71% முதல் தவணை தடுப்பூசி மற்றும் 31% இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும் முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கையை 100% உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் தடுப்பூசி செலுத்திய ஆசிரியர்கள் மட்டுமே பள்ளிக்கு வர அனுமதிக்கப்பட்டுள்ளனர் .திருப்பூரில் நேற்று 2 மாணவிகளுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அதனை தொடர்ந்து அவர்களை சார்ந்த 115 மாணவர்களின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டது. அதில் 13 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி அவர்கள் நலமாக இருப்பதால் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து மாணவர்களின் பெற்றோர்கள் தடுப்பூசி செலுத்தி உள்ளனரா என்று கண்காணிக்கபடுவதால் மாணவர்கள் தங்கள் பெற்றோரை தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்த வேண்டும். அதுமட்டுமில்லாமல் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக மத்திய அரசு தயாராக உள்ளது என்று கூறப்படுகிறது. இதற்கான விலை குறித்து மத்திய சுகாதார துறையிடம் கலந்து ஆலோசித்து வருகிறது. மேலும் மொத்தம் 10 மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ள நிலையில் வார நாட்களில் தடுப்பூசி செலுத்தும் பணியில் தொய்வு ஏற்பட்டு உள்ளது.
எனவே இன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் 6 ஊராட்சிகளில் நடைபெறும் மெகா தடுப்பூசி பணியை நேரில் சென்று ஆய்வு மேற்கொள்கிறேன். அதைத்தொடர்ந்து ஞாயிறு கிழமையில் மது அருந்துபவர்களின் விருப்பத்திற்காக ஞாயிற்றுக்கிழமை இல்லாமல் பிற நாட்களில் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. பண்டிகை காலத்தில் 14 மாவட்டங்களில் கன மழையையும் தாண்டி தடுப்பூசி செலுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அடுத்த வாரம் தடுப்பு ஊசி செலுத்தி கொள்வோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.