Categories
உலக செய்திகள்

600 மருத்துவ உபகரணங்கள்…. இந்தியாவிற்கு அனுப்பிய இங்கிலாந்து அரசு….!!!

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகமாக காணப்படுவதால் கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ளது அதனை சரி செய்வதற்கு இங்கிலாந்து அரசு உதவி வருகிறது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வருவதால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துகொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளும் போதுமான அளவில் மருந்து உபகரணங்களும் இல்லாததால் இந்தியாவில் நெருக்கடியான சூழல் ஏற்பட்டுள்ளது. ஆகையால் பல்வேறு சர்வதேச நாடுகள் இந்தியாவிற்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன.

அந்தவகையில் அமெரிக்கா நியூயார்க் நகரிலிருந்து சுமார் 5 டன் எடையுள்ள ஆக்சிஜன் சிலிண்டர்களை இன்று ஏர் இந்தியா நிறுவனம் மூலம் அனுப்பி வைத்தது. இதனை தொடர்ந்து இங்கிலாந்தும் இந்தியாவிற்கு உதவும் வகையில் 600 க்கும் மேற்பட்ட மருத்துவ சாதனங்களை இந்தியாவிற்கு அனுப்பி வைப்பதாக தூதரகம் மூலம் கூறியது.

இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த வகையில் பயன்படும் வென்டிலேட்டர்கள் மற்றும் ஆக்சிஜன் உபகரணங்கள் அனைத்தும் வழங்குவதாக தெரிவித்தது . இந்த உபகரணங்கள் அனைத்தும் செவ்வாய் கிழமை அன்று புதுடெல்லிக்கு வந்துசேரும் எனவும் மற்ற உபகரணங்கள் அனைத்தும் இந்த வார இறுதிக்குள் வந்துவிடும் என்றும் தெரிவித்திருக்கின்றனர்.

இந்த ஆக்சிஜன் உபகரணமானது வளிமண்டலத்தில் காற்றில் இருந்து ஆக்சிஜனை பிரித்து வழங்கு  தன்மை கொண்டது .இதனால் மருத்துவமனையில் ஆக்சிஜன்  பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு இருக்காது என்றும் கூறியிருக்கிறது. மேலும் மத்திய அரசுடன் இணைந்து இங்கிலாந்து அரசு பணியாற்றி வருவதாகவும் இது போன்று வரும் காலங்களில் என்ன உதவி தேவைப்படும் என்று ஆலோசனை செய்து சரியான நேரத்தில் வழங்க இருப்பதாகவும் இங்கிலாந்துஅரசு அறிவித்திருக்கிறது.

Categories

Tech |