Categories
உலக செய்திகள்

“600 வெடிகுண்டுகளை தயாரித்த இளைஞர்!”.. வீட்டில் மறைத்து வைத்திருந்த அதிர்ச்சி சம்பவம்..!!

ஜெர்மனியில் இளைஞர் ஒருவர் 600 வெடிபொருட்களை தன் வீட்டில் மறைத்து வைத்திருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெர்மனியில் உள்ள Hesse மாநிலத்தின் Spangenberg என்ற சிறிய நகரில் வசிக்கும் 20 வயது இளைஞர் மார்வின். இவர் தச்சர் பயிற்சியாளராக இருக்கிறார். இவர் சில மாதங்களுக்கு முன் தான் Spangenberg-ற்கு வந்திருக்கிறார். இதனிடையே காவல்துறையினர் அவரின் வீட்டில் திடீரென்று சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது, அவரே தயாரித்த 600 வெடிபொருட்கள் அவரின் வீட்டில் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, அவரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இது குறித்து அவரின் முதலாளியான தச்சர் கூறுகையில், மார்வின் இப்படிப்பட்டவர் என்று நம்ப முடியவில்லை. அவர் கைது செய்யப்பட்டது, காவல்துறையினர் கூறி தான் எனக்கு தெரியவந்தது. அதற்கு மேல் எனக்கு எதுவும் தெரியாது என்று கூறியிருக்கிறார்.

இந்நிலையில், மார்வின் அரசாங்கத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும் வன்முறை செயலை செய்ததற்கும், வெடிபொருள் சட்டத்தை மீறியதற்கும் அவருக்கு பத்து வருடங்கள் ஆயுள்  தண்டனை விதிக்கப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது.

Categories

Tech |