பஞ்ச்ஷீர் மாகாணத்தில் நடந்த சண்டையில், 600 தலீபான்கள் உயிரிழந்ததாக போராளிகள் குழு தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானிலிருந்து பிற நாட்டு படைகள் மொத்தமாக வெளியேறியதால் தலிபான்கள் நாட்டை கைப்பற்றினார்கள். நாட்டில் இருக்கும் 34 மாகாணங்களில் 33 மாகாணங்களை கைப்பற்றி விட்டார்கள். எனினும் இந்துகுஷ் மலைத்தொடரின் அருகே இருக்கும் பஞ்ச்ஷீர் என்ற மாகாணத்தை தலீபான்களால் கைப்பற்ற முடியவில்லை.
இம்மாகாணத்தில், சுமார் இரண்டு லட்சம் மக்கள் வாழ்கிறார்கள். இங்க மாகாணத்தைச் சேர்ந்த மக்கள் பல வருடங்களாக தலிபான்களை எதிர்த்து போராடுபவர்கள். கடந்த 1980-ஆம் காலகட்டங்களில், அரசப் படைகளை எதிர்த்தும், 1990 காலகட்டங்களில் தலிபான்களை எதிர்த்தும் இந்த மாகாணத்தை சேர்ந்த போராளிகள் போராடியுள்ளனர்.
அதன்படி, தற்போது நாட்டின் இடைக்கால அதிபர் என்று தன்னை அறிவித்த துணை அதிபரான, அமருல்லா சாலேயின் தலைமையில் பஞ்ச்ஷீர் மாகாணத்தின் போராளிகள் தலிபான்களுடன் மோதலில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில், இந்த மோதலில் தலிபான்கள் அமைப்பை சேர்ந்த 600 நபர்கள் உயிரிழந்ததாக பஞ்ச்ஷீர் மாகாண போராளிகள் அமைப்பு தெரிவித்திருக்கிறது.
மேலும் ஆயிரக்கணக்கான தலிபான்கள் சரணடைந்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது. அதே சமயத்தில், தலிபான்கள் அமைப்பு, பஞ்ச்ஷீர் மாகாணத்தை கைப்பற்றுவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறிவித்திருக்கிறது.