Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

6000 ஆயிரம் கோழிகள் பலி…. தண்ணீரில் கலக்கப்பட்ட விஷம்…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!

6000 கோழிகள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், செண்பகராமன்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவருக்கு 4 கோழிப்பண்ணைகள் இயங்கிக் கொண்டிருந்தது. இந்நிலையில் அதில் இரண்டு கோழிப் பண்ணைகளை ராஜன் என்பவருக்கு கடந்த 45 நாட்களுக்கு முன்னதாக விற்றுள்ளார். இந்நிலையில் இன்று காலை ராஜன் கோழிப் பண்ணைகளுக்கு வந்திருந்த சமயத்தில் 6 ஆயிரம் கோழிகள் மர்மமான முறையில் உயிரிழந்து இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதைத்தொடர்ந்து ராஜன் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஆரல்வாய்மொழி காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில் கோழிகளுக்கு வைக்கப்பட்டிருந்த தண்ணீரில் விஷம் கலந்து இருப்பதை கண்டறிந்துள்ளனர். இதையடுத்து இப்பகுதியை சேர்ந்த சாஜன் என்பவரின் மீது இதற்கு முன்னதாக கோழித் தீவனங்களை திருடியதாக புகார் இருந்து வந்த நிலையில் தற்போது அவர் தலைமறைவாகியுள்ளது சந்தேகத்தை எழுப்பியுள்ளது. எனவே போலீசார் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர். இதையடுத்து 6000 கோழிகள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |